Published : 11 Sep 2022 04:15 AM
Last Updated : 11 Sep 2022 04:15 AM

மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை

சென்னை

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகர போக்குவரத்துக் கழகத் தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ), கடந்த 1984-ம் ஆண்டு முதல் சென்னை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்நிறுவனத்தில் 2 ஆண்டு கால மோட்டார் வாகன மெக்கானிக் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இங்கு இதுவரை 1,292 மாணவர்கள், அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது, 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை முதல்வர், மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிலையம், மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை 600044 என்ற முகவரியிலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் others - Download என்ற பகுதியிலும் பெறலாம்.

கூடுதல் விவரங்களைப் பெற 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்களிலும், mtciti591@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x