Published : 11 Sep 2022 04:40 AM
Last Updated : 11 Sep 2022 04:40 AM

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 165 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 165 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளியில் பயின்ற 165 பேர் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு (எம்பிபிஎஸ்) தேர்வாக வாய்ப்புள்ளது. நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் மாணவர்களுக்கு உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.நாகேஸ்வரன் 373 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.சரண் 280 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.சரண் விஷ்வா 260 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

மேலும், 300 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும், 200 மதிப்பெண்ணுக்கு மேல் 142 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு 165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x