பி.எஸ்.சி., பி.சி.ஏ., பட்டதாரிகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் விஐடியில் பயிற்சி

விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் | கோப்புப் படம்
விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் | கோப்புப் படம்
Updated on
1 min read

விஐடியில் பி.எஸ்.சி., பி.சி.ஏ., பட்டதாரிகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் பி.எஸ்.சி., பி.சி.ஏ., பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் கூடிய தகவல் தொழில்நுட்பத் துறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் நிறுவனமும் அனை வருக்கும் உயர்கல்வி அறக்கட் டளையும் இணைந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்களுக்கு 4 மாத கால தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் பி.எஸ்.சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவீதம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 84284-08872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களுடைய சுய விவரங்களை info.uhet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 20-ம் தேதிக்குள் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திறனறித்தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க அனுமதிக் கப்படுவார்கள். இந்த தகவலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in