அக்டோபர் 1-ம் தேதி: தமிழ் மொழிதிறனறி தேர்வு

அக்டோபர் 1-ம் தேதி: தமிழ் மொழிதிறனறி தேர்வு

Published on

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகள், அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு தயாராகி பங்கு பெறுவதுபோல, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ‘திறனறித் தேர்வு’ நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்புமாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத, வரும் 9-ம் தேதி வரைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடம் இதற்கான பாடத் திட்டமாகும்.

அக்.1-ம் தேதி கொள்குறிவகையில் தேர்வு நடைபெறும்.இதில் வெற்றி பெறும் 1,500 பேரில்750 அரசுப் பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in