Published : 26 Aug 2022 05:24 PM
Last Updated : 26 Aug 2022 05:24 PM

நாடு முழுவதும் 21 போலி கல்வி நிலையங்கள்: பட்டியலை வெளியிட்ட யுஜிசி

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 21 கல்வி நிலையங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற போலியான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தப் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமல், போலியான கல்வி நிலையங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகம்: யுஜிசி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 8 போலி கல்வி நிலையங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 4 போலி கல்வி நிலையங்கள் இருப்பதாகவும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு கல்வி நிலையங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் தலா ஒரு கல்வி நிலையங்கள் போலியானவை என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தவொரு கல்வி நிலையங்களின் இந்தப் பட்டியலில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x