மாணவர்கள் இனிஷியலை இனி தமிழில் எழுத பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மாணவர்கள் இனிஷியலை இனி தமிழில் எழுத பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

பள்ளி மாணவர்கள் இனிமேல் பெயரின் முன்னெழுத்தை (இனிஷியல்) தமிழில் குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பெயரின் முன்னெழுத்தையும், கையொப்பத்தையும் தமிழில் இடுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,எமிஸ் தளத்தில் மாணவர், பெற்றோரின் பெயரை பதிவேற்றும்போது முன்னெழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in