இக்னோ படிப்புகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இக்னோ படிப்புகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Published on

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022-ம் ஆண்டு பருவத்திற்கான இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

http://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், குறிப்பிட்ட சில இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in