புதுச்சேரி | இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்காக ஓராண்டு இலவச பயிற்சி

புதுச்சேரி | இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்காக ஓராண்டு இலவச பயிற்சி
Updated on
1 min read

புதுச்சேரி: இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்காக ஓராண்டு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை தலைவர் தனபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஓராண்டுக்கு வார இறுதி நாளான சனிக்கிழமையில் போட்டித்தேர்வுகளுக்காக சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது.

குறிப்பாக யூபிஎஸ்சி, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளுக்கான தேர்வுகளுக்கும் சேர்த்து பயிற்சி தரப்படும். இதை உள்ளடக்கிய பாடத்திட்டத்தில் பயில்வோருக்கு சான்றிதழ் தரப்படும். இந்த ஓராண்டு பயிற்சியானது மாணவர்கள் யூபிஎஸ்சி மற்றும் அனைத்து அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை அளிக்கும்.

பயிற்சி இலவசம். தேர்வு கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். தேர்வானது செமஸ்டர் முறையில் மூன்று தேர்வுகள் நடக்கும். இறுதியில் சான்றிதழ் தரப்படும். மேலும் விவரம் தேவைப்படுவோர் 0413 2222354, 9345009639 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in