

திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள குர்மீத்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இங்குள்ள அனைத்துப் படிப்பு களும் அங்கீகரிக்கப்பட்டவை. சில படிப்புகள் அங்கீகாரம் இல்லை என கூறுகிறீர்கள் அவற்றுக்கு அங்கீகாரம் பெறப்படும். பல்கலைக் கழகத் துக்கு நிரந்தரமாக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரை வில் அந்தக் குழுவினர் துணை வேந்தரை தேர்வு செய்வர்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் திறன் மேம் பாட்டுப் படிப்புகள், வேளாண்மை, சுகாதார அறிவியல் உள்ளிட்ட வேலைவாய்ப்புத் தரும் புதிய படிப்புகள் தொடங்கப்படும். இது கிராமப்புற மாணவர்களுக்கு பய னளிக்கும்.
இப்பல்கலைக்கழகத்தில் உள்ள ஆயிரம் இடங்களுக்கு கியூட் தேர்வு எழுத 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்தப் படிப்புகளிலும் ஒரு இடம்கூடகாலியாக இருக்கக் கூடாது என் பதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.