எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) மூலமாகவே நடைபெறும். அதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2022-23) எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாயிலாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tn-mbamca.com, www.gct.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, தேவையான சான்றுகளுடன் இன்று (ஜூலை 11) தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளங்களில் அறியலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in