டெட் தேர்வு மாதிரி பயிற்சி: ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

டெட் தேர்வு மாதிரி பயிற்சி: ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கணினிவழியில் நடைபெறவுள்ளதால் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின்(டிஆர்பி) தலைவர் லதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (டெட்) அறிவிப்பாணை கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் பங்கேற்க 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, முதல்கட்டமாக டெட் முதல்தாள் தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை கணினிவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கணினி வழியில் தேர்வு

இந்த தேர்வு கணினிவழியில் நடைபெறவுள்ளதால் தேர்வர்களுக்கு டிஆர்பி இணையதளம் (http://trb.tn.nic.in) வழியாக பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள தேர்வர்கள், தேர்வுக்கு 15 நாட்கள் முன்பிருந்து இந்த பயிற்சியில் பங்கேற்று பலன் பெறலாம்.

இதற்கான அறிவிப்பு, தேர்வுக் கால அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in