Published : 06 Jul 2022 05:24 AM
Last Updated : 06 Jul 2022 05:24 AM

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச தேதி அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உத்தேச தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2020, 2021-ம் ஆண்டுகளில் நடத்தப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது தேர்வுக்கான உத்தேச தேதி குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,

‘‘2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏப்.26 வரை விண்ணப்பிக்க அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆக. 2-ம் வாரம் அறிவிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x