6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்கள் - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உறுதி

6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்கள் - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உறுதி
Updated on
1 min read

ராமநாதபுரம்: தமிழகத்தில் விரைவில் 6 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உயர்கல்வி வழிகாட்டிகையேட்டை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திட்டம் நன்கு உருவெடுத்து வருகிறது. பெண்கள் அதிகளவில் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ரூ.1000 வழங்கும் திட்டம், விரைவில் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள 100 சதவீதம் கல்வி பயில்வோரில், தமிழகத்தில் மட்டும் 30 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கின்றனர். விரைவில் மாணவர்களுக்கு 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in