ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - ஜூலை 7, 8 தேதிகளில் நடக்கிறது

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - ஜூலை 7, 8 தேதிகளில் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7, 8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதியும் நடைபெற உள்ளன. கலந்தாய்வு நடைபெற்ற கடைசி நாளான கடந்த பிப். 25-ம் தேதி நிலவரப்படி உள்ள காலிப் பணியிடங்களுக்குதான் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

2021-22 உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணிநிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களின் பெயர்களை நீக்க வேண்டியதில்லை.

அதே கல்வியாண்டில் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களைக் கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக திருத்தங்களை அனுப்ப வேண்டும். முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தமும் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in