

சென்னை: பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு விதிகள், பாடப் பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், 2022-23கல்வியாண்டில் பிளஸ்-1 மாணவர்சேர்க்கையின்போது, மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் (சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் நீங்கலாக) மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு முறையில் நடைபெற வேண்டும்.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினருக்கு 20 சதவீதம்,பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 3.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5 சதவீதம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், ஆதிதிராவிட அருந்ததியர்கள் இருப்பின், ஆதிதிராவிடருக்கான 18 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடங்களை முதலில் தயார் செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். பின்னர்,அந்தந்தப் பிரினருக்கு பட்டியல்தயாரிக்க வேண்டும். இவ்வாறுஅந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.