ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்.

இம்மையத்தில், இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயில முடியும். இம்மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் இன்று (ஜூன் 24) மாலை 6 மணி முதல் ஜூன் 27 மாலை 6 மணிவரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் ஜூன் 28 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும். ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சேர்க்கை நடக்கும். ஜூலை 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.

இணையத்தில் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழை பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in