

விருதுநகர்: இல்லம் தேடி கல்வி ரீடிங் மாரத் தானில் மாவட்ட அளவில் 9 லட்சம் ஸ்டார்கள் பெற்று வில்லிபுத்தூர் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவமகேஸ்வரன் கரோனா கால கற்றல் இடை வெளியை போக்குவதற்காக, மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு கடந்த 6 மாதங்களாகச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோடை விடுமுறையிலும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ‘‘ரீடிங் மாரத்தான்” என்ற நிகழ்ச்சியை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ‘‘ரீடிங் அலோன்” என்ற செயலி மூலம் ஜூன் 1 முதல் 12-ம் தேதி முடிய நடத்தியது.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 3,886 இல்லம் தேடி கல்வி மையங்களில் படிக்கும் 82,329 மாணவர்கள் பங்கேற்று 3,61,73,401 வார்த்தைகளை சரி யாக வாசித்துள்ளனர்.
இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கதைகள், எழுத்து விளையாட்டு, மாறியுள்ள சொற் களை வரிசைப்படுத்துதல், வார்த்தைகளை வேகமாக வாசித்தல் என மாணவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாண வர்களின் வாசிக்கும் மற்றும் ஒவ் வொரு சரியான செயல்பாட்டுக் கும் ஸ்டார்கள் வழங்கப்பட்டன.
இதில், வில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்தியலிங்காபுரம் தொடக்கப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் சிவமகேஸ்வரன் 9,00,829 ஸ்டார்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி நல்லம்மா 9,00,604 ஸ்டார்கள் பெற்று 2-ம் இடம் பெற்றார்.
ஏழாயிரம்பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் குமரன் 5,00,325 ஸ்டார்கள் பெற்று 3-ம் இடம் பெற்றார்.
ஒன்றிய அளவில் நரிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1,53,319 நிமிடத்தில் 63,46,374 வார்த்தைகளை வாசித்து முதலிடம் பெற்றுள்ளனர். ராஜபா ளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1,21,907 நிமிடத்தில் 52,23,794 வார்த்தைகளை வாசித்து 2-ம் இடம் பெற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1,34,756 நிமிடத்தில் 51,67,155 வார்த்தை களை வாசித்து 3-ம் இடம் பெற்றதாக" குறிப்பிட்டுள்ளார்.
அதிக ஸ்டார்களை பெற்ற மாண வர்கள், அவர்களை ஊக்குவித்த தன்னார்வலர்கள் வில்லிபுத்தூர் சீத்தாலட்சுமி, நதிக்குடி மாலதி, ஏழாயிரம்பண்ணை பூங்கொடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகி யோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் ஆகியோர் பாராட்டினர்.