792 தமிழ், ஆங்கிலச் சொற்களைக் கூறும் திருச்செங்கோடு யுகேஜி சிறுவன்: சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு

792 தமிழ், ஆங்கிலச் சொற்களைக் கூறும் திருச்செங்கோடு யுகேஜி சிறுவன்: சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு
Updated on
2 min read

நாமக்கல்: திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமார சரவணன். லாரி ஓட்டுநராகவும் உள்ளாார். இவரது மனைவி மணோன்மணி முதுகலை பட்டதாரி. இவர்களது ஒரே மகன் கே.எம்.தக்‌ஷன் வாலரை கேட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.

இவர் தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துகளில் தலா 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள் அடங்கிய 173 சொற்கள், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள் 20 உடல் பாகங்கள் காய்கறிகள் 25, பழங்கள் 35 என சுமார் 800 வார்த்தைகளை தெரிந்து வைத்தள்ளார்.

இந்த சாதனை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பியூட்சர் கலாம் புக் ஆப்ரிகார்டிலும் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங்கும் பயன்று வருகிறார்.

இவரது திறனை கண்டறிந்து எப்படி சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தீர்கள் என்பது குறித்து இவரது தாயார் மணோன்மணி கூறியது: " நாம் படிக்கும்போது எழுத்துகளில் ஆங்கிலத்தில் ஏ என்றால் ஏ பார் ஆப்பிள் அண்ட் என 12 வார்த்தைகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால் எனது மகன் ஏ என்ற எழுத்தில் பத்து ஏ முதல் இசட் வரை உள்ள இருபத்தி ஆறு எழுத்துகளிலும் 260 வார்த்தைகள் வாசிப்பான். 173 வார்த்தைகள் தெரியும்.

பழங்கள், பூச்சிகள், பறவைகள், காட்டு விலங்குகள் பெயர் தெரியும் கணக்கில் ஒன்று முதல் 100 வரை சொல்வான். அவனுக்கு ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளது. இவனை அவன் விரும்பும் துறையில் படிக்க வைப்போம்.

இதுபோன்ற சாதனைகள் குறித்த செய்திகளை பார்த்த எனது மகன் தானும் இதேபோல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதை அடுத்து, அவரை நெறிப்படுத்தி, வழிகாட்டுதல் செய்து மற்றவர்கள் சாதனையை முறியடித்து வந்தால்தான் இதுபோல் மெடல் வாங்க முடியும் என ஊக்குவித்து நாங்கள் வழிகாட்டினோம்" என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in