

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கடந்தகல்வியாண்டில் படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தி, பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பட்டச் சான்றிதழ் இல்லாததால் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குச் செல்பவர் களுக்குச் சிக்கல்கள் எழுகின்றன. ஆளுநரின் தேதி ஒதுக்கீட்டில் நிலவும் தாமதத்தால், பட்டமளிப்பு விழாவை உடனே நடத்த முடியாத சூழல் உள்ளது.
எனவே, உடனடித் தேவையுள்ள மாணவ - மாணவிகளுக்கு, பட்டமளிப்புக்கு முன்னதாக பட்டச் சான்றிதழ்களை வழங்குவது குறித்து பரி சீலனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.