

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழ், கணிதம், வேதியியல், வணிகவியல், இயற்பியல், பொருளியல், புள்ளியியல் உட்பட 80 சதவீதபாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று (மே 23) நடைபெறவுள்ளன.
முக்கிய பாடத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டும் மே 28-ம்
தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே மண்டல திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 23-ல் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.