

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’பும் இணைந்து நடத்தும் ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’ எனும் கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சி மே 23 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கான கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’ எனும் கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சியை மே 23 முதல் 3 நாட்கள் ‘இந்து தமிழ் திசை’ நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். 3 நாட்களும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் 40 நிமிடங்கள் மேஜிக் ஷோவும், 15 நிமிடங்கள் மேஜிக் டிரிக் அமர்வும் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் ‘ஃபிளையிங் மேன்’ என்றழைக்கப்படும், ‘மாயாஜால ரத்னா’வான விக்னேஷ் பிரபு நடத்தவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.589/- கட்டணம் செலுத்தி, https://www.htamil.org/00572 என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’, ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ இணைந்து நடத்துகின்றன.