

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலாநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குருப்-2 மற்றும் குருப்-2-ஏபதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 21-ம் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.
www.tnpsc.gov.in, www.tnpscexams.in விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் ஏதேனும் ஒன்றில் தங்கள் ஒருமுறை பதிவேற்ற பதிவு (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.