

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. 3,119 மையங்களில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ, மாணவிகள் தேர்வுஎழுதினர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 5,673 பேரும் சிறைக்கைதிகள் 99 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். மொத்த தேர்வர்களில் 5,290 பேர் மாற்றுத் திறனாளிகள்.
முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. விடைத்தாள் விவர குறிப்பை சரிபார்க்கவும், வினாத்தாளை படித்துப் பார்க்கவும் 15 நிமிடம் அளிக்கப்பட்டது.காலை 10.15 மணிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தொடங்கினர்.
47,315 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக 4,291 பறக்கும் படைகளும்அமைக்கப்பட்டன. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வுமேற்கொண்டனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 31-ம் தேதி முடிவடைகிறது.