Published : 02 May 2022 06:51 AM
Last Updated : 02 May 2022 06:51 AM

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

சத்தியபாமா பல்கலை. வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வாகி பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவிகளுடன் வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன் உள்ளிட்டோர்.

சென்னை: சத்தியபாமா பல்கலை. வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணைத் தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி ஆகியோர் வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

காஃக்னிசன்ட் நிறுவன மூத்த துணைத் தலைவர் ரமேஷ்தனக்கோட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 92.14% சதவீதமாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 2,004 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டில் இதுவரை 363-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. புதிய உச்சமாக 401 மாணவர்கள் ரூ.4.75 லட்சத்துக்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றுள்ளனர்.

உச்சபட்ச ஊதியமாக ஒரு மாணவருக்கு ரூ.31 லட்சம் ஆண்டு ஊதியம் கிடைக்கப்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x