Published : 27 Apr 2022 06:04 AM
Last Updated : 27 Apr 2022 06:04 AM

24 மணி நேரத்தில் 200 புத்தகங்களுக்கு மதிப்புரை: அகரம் பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை

உடுமலை: உலக புத்தக தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள அகரம் பப்ளிக் பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில், அண்மையில் வெளியான பிரபல எழுத்தாளர்களின் 200 புத்தகங்களை 175 மாணவ, மாணவிகளும், 26 ஆசிரியர்களும் படித்து, அவற்றுக்கு மதிப்புரை எழுதினர். இந்த நிகழ்வு 'எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மூலமாக புதிய உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினரும், கலைமாமணி விருது பெற்றவருமான அரசு பரமேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் மு.ஞானபண்டிதன் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் கண்ணன், இயக்குநர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எலைட் உலக சாதனை நிறுவனத்தின் முதுநிலை தீர்ப்பாளர் அமித், பார்வையாளராக கலந்துகொண்டார்.

உலக சாதனை நிகழ்ச்சியை, அதன் அமைப்பாளர் பிரதீப் ஒருங்கிணைத்தார். மாணவர்களை பாராட்டி எலைட் நிறுவனத்தின் அம்பாசிட்டர் ஜவஹர் கார்த்திகேயன் பேசினார். 24 மணி நேரம் 12 நிமிடம், 27 விநாடிகளில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டதாக அங்கீகரித்து, சாதனை சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதனை பள்ளி முதல்வர் ஞானபண்டிதன் பெற்றுக்கொண்டார். மேலும், அந்நிறுவனத்தின் உயரிய விருதான மாஸ்டர் மைண்ட் சான்றிதழும், பதக்கமும் பள்ளி முதல்வருக்கு அளித்து கவுரவிக்கப்பட்டது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x