

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்னோ பல்கலைக்கழகத்தில் 2022 ஜனவரி பருவ சேர்க்கை, 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மார்ச் 31 வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு, சான்றிதழ், செமஸ்டர் மற்றும் மெரிட் அடிப்படையிலான பாட திட்டங்களுக்குப் பொருந்தாது.
தொலைதூர படிப்புகளில் சேர விரும்புவோர் www.ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட சில இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு உண்டு. சேர்க்கை விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.