

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்இ, எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது. 2022-23 கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் இணையவழியாக மட்டும் ஏப்.18 வரை விண்ணப்பிக்கலாம். எம்சிஏ படிப்புக்கு மே 14 காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்பிஏ படிப்புக்கு மாலை 2.30 முதல் 4.30 மணி வரையும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் படிப்புகளுக்கு மே 15 காலை 10 முதல் 12 மணி வரையும் தேர்வு நடக்க உள்ளது.