குறை தீர்ப்பு முகாம்களில் ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவு

குறை தீர்ப்பு முகாம்களில் ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவு
Updated on
1 min read

சென்னை: குறைதீர்ப்பு முகாம்​களில் ஆசிரியர்​கள் அளிக்​கும் மனுக்​கள் மீது 5 நாட்​களுக்​குள் உரிய தீர்வு காண வேண்​டும் என்று தொடக்​கக் கல்​வித்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

தொடக்​கக் கல்வி இயக்​ககம் சார்​பில் வட்​டாரக் கல்வி அலு​வல​கங்​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வல​கங்​களில் மாதந்​தோறும் சனிக்​கிழமை​களில் ஆசிரியர்​களுக்​கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் பணி​யாற்​றும் ஆசிரியர்​கள், ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​களின் சேவை​கள் தொடர்​பான குறை​களை உடனுக்​குடன் நிவர்த்தி செய்​வதை கருத்​தில்​கொண்டு இந்த முகாம்​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இதில் ஊராட்சி ஒன்​றிய, நகராட்சி மற்​றும் அரசுப் பள்​ளி​களில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள் பணிப்​ப​திவேடு, சிறப்பு நிலை தகு​தி, ஊதி​யப் பலன்​கள் மற்​றும் மாறு​தல் கோரிக்கை தொடர்​பான கோரிக்​கைகளை ஆசிரியர்​களும், பணி​யாளர்​களும் மனு​வாக அளிப்​பது வழக்​கம்.

இந்​நிலை​யில், சில மாவட்​டங்​களில் குறைதீர்ப்பு முகாம்​கள் பெயரளவுக்கு நடத்​தப்​படு​வ​தாக ஆசிரியர்​கள் புகார் தெரி​வித்​தனர். இதுகுறித்து அவர்​கள் கூறும்​போது, “ஆசிரியர்​களை ஒருங்​கிணைத்து நடத்​தாமல் ஒரு பெட்​டியை வைத்து அதில் மனுக்​களை செலுத்​து​மாறு அறி​வுறுத்​துகின்​றனர். அவ்​வாறு செலுத்​தி​னாலும் குறை​களுக்​கான தீர்வு உடனடி​யாக கிடைப்​ப​தில்​லை”என தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக தொடக்​கக்​கல்வி இயக்கக அதி​காரி​கள் கூறும்​போது, “ஆசிரியர்​களுக்​கான சிறப்பு குறைதீர் முகாம்​கள் மாவட்​டக் கல்வி அலு​வலர், வட்​டாரக் கல்வி அலு​வலர் ஆகியோர் தலை​மை​யில் அந்​தந்த அலு​வல​கங்​களில் நடத்​தப்பட வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அத்​துடன், குறைதீர்ப்பு முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது ஐந்து வேலை​நாட்​களுக்​குள் உரிய தீர்வு காண​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மேலும், இதற்​காக ஒவ்​வொரு அலு​வல​கத்​தி​லும் தனி​யாக ஒரு பதிவேடு பராமரிக்க வேண்​டும். இதன் மூலம் ஆசிரியர்​களின் குறை​களுக்கு விரைந்து தீர்வு காணப்​படும்​” என்​று தெரி​வித்​தனர்.

குறை தீர்ப்பு முகாம்களில் ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவு
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in