

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன்.
நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.
இந்தத் திட்டத்தின் மூலம் நான் ஜப்பான் நாட்டில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தின் IN-CBI ஆராய்ச்சி மையத்தில் பணித்திறன் பயிற்சி பெற்றேன். குறிப்பாக நுண் அறிவியல் நுட்பங்கள், புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு எதிரான மருத்துவ முறைகள், மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறியும் வாய்ப்பு கிடைத்தது.
பேராசிரியர் கணேஷ்பாண்டியன் நமச்சிவாயம் அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மேலும் ஜப்பானியர்களின் கல்விமுறை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்கும் அரிய சந்தர்ப்பமும் கிடைத்தது.
இந்த அனுபவம் என் எதிர்கால கனவுகளுக்கு ஒளி புகட்டியது. நான் முதல்வன் திட்டத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக குழுவினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு: https://www.naanmudhalvan.tn.gov.in/
வெற்றி நிச்சயம்: நான் திருப்பூர், போயம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவன். இதற்கு முன் திருப்பூரில் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்துக்கொண்டிருந்தேன்.
சம்பளம் குறைவு, வாழ்க்கை சிரமம் என அன்றாட வாழ்வில் தினமும் கஷ்டம் தான். ஒரு நாள் செய்தித்தாளில் கலைஞர் கைவினைத்திட்டம் பயிற்சி பற்றி பார்த்ததுதான் என் வாழ்க்கையை மாற்றியது. அதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக 7 நாள் பயிற்சியில் லாண்டரி தொழில் நடத்துவது, வாடிக்கையாளர் சேவை, இயந்திரம் பயன்படுத்துவது என எல்லாம் கற்றுக்கொண்டேன்.
இன்று நான் போயம்பாளையம், திருப்பூரில் என் சொந்த லாண்டரி கடை நடத்துகிறேன். 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், மாதம் ரூ.60,000 லாப வருமானம் பெற்று வருகிறேன். இதற்கு முன் கூலி வாழ்க்கை, தற்போது சுயதொழில் உரிமையாளர்.
இந்த வாய்ப்பு என் வாழ்க்கைக்கு பெரிய திருப்புமுனை, இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பயிற்சி அளித்த Dhobi G மற்றும் இந்த திட்டத்தின் மூலம் என் வாழ்க்கையை மாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் விவரங்களுக்கு: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/