மாணவர்கள் தோல்வி அடைந்தால் துவண்டு போகக் கூடாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை

விஐடி சென்னை பல்கலைக்கழக 13-வது பட்டமளிப்பு விழா நேற்று மேலக்கோட்டையூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவில் நிறுவனர் வேந்தர் ஜி.விசுவநாதன் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்டங்களை வழங்கினார். அருகில் வங்கதேச தூதரகத்தின் துணை தூதர் ஷெல்லி சலேஹின், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜிவி.செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.படம்:எம்.முத்துகணேஷ்
விஐடி சென்னை பல்கலைக்கழக 13-வது பட்டமளிப்பு விழா நேற்று மேலக்கோட்டையூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவில் நிறுவனர் வேந்தர் ஜி.விசுவநாதன் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்டங்களை வழங்கினார். அருகில் வங்கதேச தூதரகத்தின் துணை தூதர் ஷெல்லி சலேஹின், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜிவி.செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.படம்:எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

மேலக்கோட்டையூர்: மாணவர்கள் எத்தகைய வெற்றி அடைந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும். அதேபோல் தோல்வி அடைந்தால் துவண்டுபோகக் கூடாது என சென்னையில் நடந்த விஐடி கல்வி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை வழங்கினார்.

​விஐடி சென்னை கல்வி நிறு​வனத்​தின் 13-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், ஜி.​வி.செல்​வம் முன்​னிலை வகித்​தனர். விஐடி பல்​கலைக்கழக துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன் வரவேற்​றார்.

விழா​வில், கவுரவ விருந்​தின​ராக வங்​கதேச தூதரகத்​தின்துணைத் தூதர் ஷெல்லி சலேஹின் பங்​கேற்​றார். விழா​வில், 39 பேருக்கு தங்​கப் பதக்​கம் உட்பட மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை வழங்கி தமிழக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மின்​னணு உள்​ளிட்ட பல்​வேறு தொழிற்​சாலைகளில் லட்​சக்​கணக்​காண பெண்​கள் வேலை செய்​கிறார்​கள். தற்​போது வேலை மற்​றும் திறனை மேம்​படுத்​து​வது மட்​டுமே கல்​வி​யாக இருக்​கிறது. அதை சற்று மாற்ற வேண்​டும். தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனங்​களில் சட்​டம், வரலாறு, இலக்​கி​யம் போன்ற துறை​களும் இருப்​பது முக்​கி​யம்.

வாழ்​வில் வெற்றி நிரந்​தரமல்ல, தோல்வி ஈடு​செய்ய முடி​யாததும் அல்ல. எனவே, மாணவர்​கள் வாழ்​வில் எத்​தகைய வெற்​றியை அடைந்​தா​லும் பணிவுடன் இருக்க வேண்​டும். அதே​போல, தோல்வி அடைந்​தால் துவண்டு போகக்​கூ​டாது. இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

வங்​கதேச தூதரகத்​தின் துணைத் தூதர் ஷெல்லி சலேஹின் பேசும்​போது, "திறமை மட்​டுமின்​றி, நற்​குண​மும், நேர்​மை​யும் இளைஞர்​களுக்கு முக்​கியம். வாழ்​வில் நிச்​சயமற்ற தன்மைஇருந்​தா​லும், தைரிய​மாக எதிர்​கொள்​ளுங்​கள். அது வெற்​றியை நோக்கி அழைத்​துச் செல்​லும்" என்​றார்.

வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, "உயர்​கல்வி மூலம் மட்​டுமே 2047-க்​குள் இந்​தியா உலகின் வளர்ந்த நாடு​களில் ஒன்​றாக இருக்க முடி​யும். ஆனால், உயர்​கல்வி சேர்க்கை விகிதம் 28 சதவீதம் மட்​டுமே உள்​ளது. இந்​நிலை மாற வேண்​டும்" என்​றார். விழா​வில் 6,468 இளங்​கலை, முதுகலை மாணவர்​கள், 113 ஆராய்ச்சி மாணவர்​கள் என மொத்​தம் 6,581 பேருக்கு பட்​டம் வழங்​கப்​பட்​டது. இணை துணைவேந்​தர் டி.​தி​யாக​ராஜன், விஐடி வேந்​தரின் ஆலோசகர் எஸ்​.பி.​தி​யாக​ராஜன், விஐடி வேலூர் இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மாலிக், விஐடி பதி​வாளர் டி.ஜெய​பார​தி, கூடு​தல் பதி​வாளர் பி.கே.மனோகரன் மற்​றும் பேராசிரியர்​கள், மாணவர்​கள்​, பெற்​றோர்​ கலந்​து கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in