

சென்னை: மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ), சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்னோ தொலைதூரக் கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், மர்ணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடைசி தேதி ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக, மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை, டிப்ளமா படிப்புகளில் மாணவர்கள் ஆகஸ்ட் 31 வரை சேரலாம். https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்ளளாம்.