எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 3-வது முறையாக நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 3-வது முறையாக நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்​கியது.

கடந்த 4-ம் தேதி வரை இணை​யதளத்​தில் பதிவு செய்து கல்​லூரி​களை தேர்வு செய்ய அவகாசம் வழங்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.

நெல்லை மாணவருக்கு... இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.


அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in