5 ஐஐடி-களில் புதிதாக 1,300 இடங்கள்

5 ஐஐடி-களில் புதிதாக 1,300 இடங்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐஐடி திருப்பதி, ஐஐடி பாலக்காடு உட்பட 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 1,300 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய கல்வித் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: 2025-26-ம் கல்வியாண்டில் 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் 1,364 இடங்கள் புதிதாக சேர்க்கப் பட்டு உள்ளன. இதன்படி ஐஐடி பிலாய் கல்வி நிறுவனத்தில் 378 இடங்கள், ஐஐடி தார்வாட் கல்வி நிறுவனத்தில் 343 இடங்கள், ஐஐடி ஜம்மு கல்வி நிறுவனத்தில் 251, ஐஐடி திருப்பதி கல்வி நிறுவனத்தில் 199, ஐஐடி பாலக்காடு கல்வி நிறுவனத்தில் 193 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

2025-26-ம் ஆண்டு மத்​திய பட்​ஜெட்​டில், ஐஐடி கல்வி நிறு​வனங்​களில் புதி​தாக 6,500 இடங்​கள் சேர்க்​கப்​படும் என்று நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் அறி​வித்​தார்.

இதன்​படி 2014-ம் ஆண்​டுக்கு பிறகு தொடங்​கப்​பட்ட ஐஐடி கல்வி நிறு​வனங்​களில் தேவைக்​கேற்ப புதிய இடங்​கள் சேர்க்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 2015, 2016-ம் ஆண்​டு​களில் பாலக்​காடு, பிலாய், ஜம்​மு, தார்​வாட், திருப்​ப​தி​யில் ஐஐடி கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட்​டன. இந்த கல்வி நிறு​வனங்​களின் பரிந்​துரைகளை ஏற்று இளநிலை, முது​நிலை, ஆராய்ச்சி படிப்​பு​களில் புதிய இடங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்டு இருக்​கிறது.

இந்த 5 கல்வி நிறு​வனங்​களின் உள்​கட்​டமைப்​பு, விரி​வாக்க பணி​களுக்கு மத்​திய பட்​ஜெட்​டில் ரூ.11,828 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அடுத்த 4 ஆண்​டு​களில் 5 கல்வி நிறு​வனங்​களும் படிப்​படி​யாக மேம்​படுத்​தப்​படும்.
இவ்​வாறு மத்​திய கல்​வித் துறை மூத்த அதி​காரி தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in