உயர் வேலைவாய்ப்பு அளிக்கும் ஆன்லைன் படிப்புகள்: ஐஐடி அறக்கட்டளை அறிமுகம்

உயர் வேலைவாய்ப்பு அளிக்கும் ஆன்லைன் படிப்புகள்: ஐஐடி அறக்கட்டளை அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: உயர் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி, காமர்ஸ் கிளவுட் தொடர்பான 2 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி பிரவார்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மாணவர்கள், பட்டதாரிகள், பணியில் உள்ளவர்களின் தொழில்நுட்பத் திறனையும் வேலைவாய்ப்புத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் ஆகுமென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி, சேல்ஸ்போர்ஸ் பிடூசி காமர்ஸ் கிளவுட் ஆகிய 2 ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படிப்புகள் வி-வாக்ஸல் என்ற அமெரிக்க ஏஆர், விஆர் மற்றும் எம்ஆர் நிறுவனத்துடனும், காடநேட்டிவ்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடனும் இணைந்து வழங்கப்படுகின்றன.

விர்ச்சுவல் ரியாலிட்டி படிப்பு 60 மணி நேரம் கொண்டது. இப்படிப்பு ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் https://digitalskills.pravartak.org.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 13-ம் தேதி வரை பதிவுசெய்யலாம்.

அதேபோல், சேல்ஸ்போர்ஸ் பிடூசி காமர்ஸ் கிளவுட் படிப்பு 8 வார கால படிப்பு ஆகும். இது 70 மணி நேர வகுப்பு பயிற்சியையும், 130 மணி நேர செய்முறை பயிற்சியையும் உள்ளடக்கியது.

இப்படிப்பு ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சேர மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 20-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை ஐஐடி பிரவார்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in