அங்கீகார புதுப்பிப்பு: வணிகவியல் பயிலகங்களுக்கு தொழில்நுட்ப கல்வித் துறை எச்சரிக்கை

அங்கீகார புதுப்பிப்பு: வணிகவியல் பயிலகங்களுக்கு தொழில்நுட்ப கல்வித் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

அங்கீகார புதுப்பித்தலுக்கு ஜூன் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காத வணிகவியல் பயிலகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசு அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்களுக்கு தொழில்நுட்பத் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் நிரந்தர மற்றும் தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள், 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கு அங்கீகார கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்படி, தொடர் அங்கீகாரம் பெற்ற பயிலகங்கள் ஓராண்டுக்கு ரூ.125 வீதம் 2 ஆண்டுக்கு சேர்த்து ரூ.250-ம் தற்காலிக அங்கீகாரம் பெற்ற பயிலகங்கள் ஓராண்டுக்கு ரூ.625 வீதம் 2 ஆண்டுக்கு ரூ.1,250ம் கட்டணத் தொகையாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். அங்கீகார புதுப்பித்தலுக் கான விண்ணப்பங்களை http://tims.tndtegteonline.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 30ம் தேதி ஆகும். அதற்குள் விண்ணப் பிக்காத பயிலகங்கள், செயல்படாத பயிலங்களாக கருதி அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in