பிஇ, பிடெக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ல் தொடக்கம்

பிஇ, பிடெக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ல் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூிரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.

இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சேர்க்கைக்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என்றும், ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என்றும் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, தொழிலநுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in