தேர்வர்களுக்கு உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றங்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாதிரி விடைத்தாள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டுவந்துள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ‘OMR Answer Sheet-Sample’ என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கறுமை நிற பால்பாயின்ட் பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும். மேலும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பகுதி-2-ல் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். தேர்வாணையத்தால் இனிமேல் நடத்தப்பட இருக்கும் அனைத்து ஓஎம்ஆர் முறை தேர்வுகளிலும் பங்கேற்கும் தேர்வர்கள் புதிய மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாளினை நன்கு பார்த்து, அறிந்துகொண்டு தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in