‘எமிஸ்’ தளத்தில் கல்வி உதவி தொகை: மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

‘எமிஸ்’ தளத்தில் கல்வி உதவி தொகை: மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

Published on

சென்னை: கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்' இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in