எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யின் பாடத்திட்ட ஆய்வு குழுவை மாற்ற முடிவு

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யின் பாடத்திட்ட ஆய்வு குழுவை மாற்ற முடிவு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வு குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தற்போதைய பாடத்திட்ட ஆய்வு குழுவின் (போர்டு ஆஃப் ஸ்டடீஸ்) பதவிக் காலம் வரும் ஜூலை 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அந்த குழுவை புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே, அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் விவரங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் இமெயில் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in