பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஹால்டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு

தேர்வு | கோப்புப் படம்
தேர்வு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 14-ம் மதியம் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4 லட்சத்து 88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9 லட்சத்து 13,036 பேர் எழுத இருக்கின்றனர். இதில் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 14-ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். ஹால்டிக்கெட்டில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும்.

இது தவிர பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு மையக் கண்காணிப்பாளர்களை அணுகி மாற்றம் செய்ய முன்வர வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்ளை வழங்க வேண்டுமென தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in