

சென்னை: ஐஏஎஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி அளிக்கிறது.
இது குறித்து சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் தன்ராஜ் உமாபதி வெளியிட்டுள்ள தகவல்: ஐஏஎஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு (Guiding by real time officers) நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
மகளிருக்கு தனி விடுதி வசதி உண்டு. தரமான நூலகம், படிப்பகத்துடன் செயல்பட்டு வரும் இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 25. மேலும் விவரங்களுக்கு 9003242208 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விவரம் அறிய > https://bharathipayilagam.com/