எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்திய ‘சொல் தமிழா சொல் - 2025’ பேச்சுப் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்திய ‘சொல் தமிழா சொல் - 2025' பேச்சு போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் முனைவர் விமலா அண்ணாதுரை, முனைவர் அரங்க ராமலிங்கம் ஆகியோர் அறிவித்தனர். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்திய ‘சொல் தமிழா சொல் - 2025' பேச்சு போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் முனைவர் விமலா அண்ணாதுரை, முனைவர் அரங்க ராமலிங்கம் ஆகியோர் அறிவித்தனர். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Updated on
1 min read

பொத்தேரி: எஸ்​.ஆர்​.எம். தமிழ்ப்​பேராயம் நடத்திய ‘சொல் தமிழா சொல் - 2025'பேச்​சுப்​போட்​டி​யில், கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வ​முடன் பங்கேற்று, தனித்​திறனை வெளிப்​படுத்​தினர். இளம் தலைமுறை​யினரிடம் தமிழ் ஆர்வத்தை வளர்க்​கும் விதமாக ‘சொல் தமிழா சொல்- 2025' என்ற மாநில அளவிலான மாபெரும் பேச்​சுப் போட்டி கல்லூரி மாணவர்​களுக்காக நடத்​தப்​படு​கிறது.

தமிழகமெங்​கும் தமிழில் பேச்​சுத் திறன்​மிக்க கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கு​விக்​கும் உயரிய நோக்​கத்​துடன் எஸ்.ஆர்​.எம். தமிழ்ப் பேராயம் சார்​பில் இப்போட்டி நடத்​தப்​பட்​டது. 2010-ம் ஆண்டு முதல் இந்தபோட்​டிகள் நடத்​தப்​படு​கின்றன. தமிழகம் மற்றும் புதுச்​சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்​களாகப் பிரிக்​கப்​பட்டு இந்த பேச்​சுப் போட்டி பல்வேறு கல்லூரி​களில் நடத்​தப்​படு​கிறது.

இந்நிலை​யில் முதல் மண்டலமாக சென்னை மண்டலத்​துக்கான பேச்​சுப் போட்டி காட்​டாங்​ கொளத்​தூர் எஸ்.ஆர்​.எம். அறிவியல் மற்றும் தொழில்​நுட்பக் கல்வி நிறு​வனத்​தில் நேற்று முன்தினம் நடைபெற்​றது. 20-க்​கும் மேற்​பட்ட தலைப்பு​களில் 500-க்​கும் மேற்​பட்ட மாணவர்கள் பங்கேற்​றனர். 15-க்​கும் மேற்​பட்ட நடுவர்களை கொண்டு பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்​டிகளில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்தஎஸ். பாண்டி கணேஷ், முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்​றார்.

இரண்​டாம் பரிசாக புனித ஜோசப் பொறி​யியல் கல்லூரி இல. சஞ்சனா, ரூ. 75,000, 3-ம் பரிசாக சென்னை பல்கலைக்​கழகத்தை சேர்ந்த சு.சதீஸ்​கு​மார் ரூ.50,000 பெற்​றனர். ஒவ்வொரு ஆண்டும் எஸ்.ஆர்​.எம். தமிழ்ப்​பேராயம் ‘சொல் தமிழா சொல்' பேச்​சுப்​ போட்​டியை நடத்து​கிறது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழு​வதும் உள்ள கல்லூரி மாணவர்​களுக்கு ரூ. 40 லட்​சம் பரிசுத் தொகை​யுடன் மிக பிரம்​மாண்​டமாக பேச்​சுப் ​போட்டி நடை​பெறுகிறது என்பது குறிப்​பிடத்​தக்​கது. இந்தப் போட்டியில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் பிரிண்ட் மீடியா பார்ட்னராகவும், புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் போன்ற தொலைக்காட்சிகள் மீடியா பார்ட்னராகவும் இருந்து நிகழ்ச்சியை நடத்தின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in