டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் புதிதாக 47 காலி இடங்கள் சேர்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் புதிதாக 47 காலி இடங்கள் சேர்ப்பு
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் காலி இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 27 மின்வாரிய மதிப்பீட்டாளர் உட்பட புதிதாக 47 பணி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், வன காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 2024 ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. முன்னதாக, இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானபோது, காலி இடங்கள் எண்ணிக்கை 6,244 ஆக இருந்தது. அதன்பிறகு, தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கடைசியாக 9,491 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக மேலும் 47 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு, இந்த எண்ணிக்கை 9,538 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு எலெக்ட்ரிக்கல் லைசன்ஸிங் வாரியத்தில் 4 இளநிலை உதவியாளர், தமிழ்நாடு சிமென்ட் கழகத்தில் இளநிலை உதவியாளர், நேர்முக உதவியாளர் பணிகளில் 16 காலி இடங்கள், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் (மின்சார வாரியம்) 27 மின் மதிப்பீட்டாளர் (அசஸர்) என புதிதாக 47 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in