மாதாந்திர உதவித்தொகையுடன் பட்டதாரிகளுக்கு ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி

மாதாந்திர உதவித்தொகையுடன் பட்டதாரிகளுக்கு ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி

Published on

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து பொறியியல் பட்டதாரிகள், கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சியை (அப்ரண்டீஸ் பயிற்சி) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் சேரலாம். அவர்கள் தங்கள் படிப்பை 2020, 2021, 2022, 2023, 2024-ம் ஆண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியுடைய பட்டதாரிகள் டிச.31-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை visit www.boat-srp.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in