

விருத்தாசலம்: மாநில அளவிலான தட்டச்சுத் தேர்வில் திட்டக்குடியைச் சேர்ந்த மாணவி மோகனாஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தட்டச்சுப் பயிற்சியாளர்களுக்கான மாநிலத் தேர்வு முக்கிய ஊர்களில், மையங்கள் வாரியாக நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வில், இளநிலை ஆங்கில தட்டச்சுப் பிரிவில் மாநில அளவில் திட்டக்குடியைச் சேர்ந்த மாணவி மோகனாஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, மாணவி மோகனாஸ்ரீயை பயிற்றுநர் ராஜாராமன் உள்ளிட்டோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.