

சென்னை: சிறப்பு எம்பிஏ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அப்பணியில்இருந்துகொண்டே எம்பிஏ படிக்கும்வகையில், 2 ஆண்டு சிறப்பு எம்பிஏ(Executive MBA) படிப்பை சென்னைஐஐடி வழங்கி வருகிறது. பணிச்சூழல் பாதிக்கப்படாத வகையில், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஐஐடி வளாகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெறும். உலக அளவில் புகழ்பெற்றமேலாண்மை துறை பேராசிரியர்கள், தொழில் நிபுணர்கள் வகுப்பு எடுப்பார்கள்.
இந்நிலையில், வரும் ஆண்டில் சிறப்பு எம்பிஏ சேர்க்கைக்கான அறிவிப்பை ஐஐடி வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர விரும்புவோர் https://doms.iitm.ac.in/admission என்ற இணையதளத்தில்அக்டோபர் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நவம்பர் 8, 9, 10-ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவு வெளியாகும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 2025 ஜனவரியில் வகுப்புகள் தொடங்கும் என ஐஐடி அறிவித்துள்ளது.