குரூப்-4 தேர்வுக்கு தற்போதே தயாராக வேண்டும்: கல்வியாளர் ஆதலையூர் சூரியகுமார் அறிவுறுத்தல்

குரூப்-4 தேர்வு குறித்து `இந்து தமிழ் திசை' வெளியிட்டுள்ள விழிப்புணர்வு நூலை அமைச்சர்கோவி.செழியனிடம் வழங்கி னார் ஆதலையூர் சூரியகுமார்.
குரூப்-4 தேர்வு குறித்து `இந்து தமிழ் திசை' வெளியிட்டுள்ள விழிப்புணர்வு நூலை அமைச்சர்கோவி.செழியனிடம் வழங்கி னார் ஆதலையூர் சூரியகுமார்.
Updated on
1 min read

சென்னை: அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு மாணவர்கள் தற்போதே தயாராக வேண்டும் என்று கல்வியாளர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குதயாராகும் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கல்வியாளரும், `இந்து தமிழ் திசை' டிஎன்பிஎஸ்சி குரூப்-4 வழிகாட்டி நூலின் ஆசிரியருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார், கும்பகோணத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து `இந்து தமிழ் திசை ' குரூப்-4 வழிகாட்டி நூலை வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு 2025-ம்ஆண்டு பொற்காலமாக இருக்கப்போகிறது. 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பெரும்பான்மையான போட்டித் தேர்வர்கள் எதிர்கொள்ளும் குரூப்-4 தேர்வு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் இந்த தேர்வுக்கு, இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. எனவே, போட்டித் தேர்வர்கள் தற்போது முதலே தயாராக வேண்டும்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகஉயர் கல்வித் துறை அமைச்சரிடம் `இந்து தமிழ் திசை' குரூப் 4வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. மேலும், கல்வித் துறை உயரதிகாரிகள், பேராசிரியர்களுக்கும் நூல்கள் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நூல் தலைப்பு: டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-IV,ஆசிரியர்: முனைவர் ஆதலையூர் சூரியகுமார், விலை: 500/- பக்கம்: 686. ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications. தொடர்புக்கு: 7401296562

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in