ஆளுநர் தலைமையில் 24-ல் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

ஆளுநர் தலைமையில் 24-ல் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Updated on
1 min read

சென்னை: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை அரங்கில் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒருங்கிணைப்புக் குழுதான், பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா துணைவேந்தர் இல்லாமல் நடைபெறுகிறது. 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in