

சென்னை: அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி ஆணையர் டி.ஆபிரகாம், பல்கலைக்கழக பேராசிரியை உஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த ஒருங்கிணைப்பு குழு பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கவனிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.