

சென்னை: தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங் களின் வேந்தராக இருப்பவர் ஆளுநர். அந்த வகையில் பல் கலைக்கழகங்களின் பொதுவான செயல்பாடுகள், வளர்ச்சித் திட் டங்கள், உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய புதிய முயற்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், துணைவேந்தர் களுடன் ஆளுநர் மாளிகையில் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்பட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், துணை வேந்தர்இல்லாத சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல் கலைக்கழகங்களின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்புதான்உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.